ஓம் சத்குரவே சரணம்
"தியானத்தில் அனுபவங்கள் நேரவில்லையே என்று வருந்தாதே. கடவுளை நோக்கிச்செல்லும் பாதை சர்க்கஸ் அல்ல! பொதுவாகத் தோன்றும் தியானபலன்களான உள்மகிழ்ச்சி, சாந்தம் முதலியவைகளைக் குறித்தும் விசனப்படாதே. எல்லாம் கடவுளின் காலத்தில் நிறைவேறும். அதுவரை தியானத்தைக் கூட கர்மயோகமாகக் (பலனை எதிர்பாராது செய்யும் கடமையாகக்) கருதுவாயாக. கடவுளின் தயவைப் பெறல் வேண்டும் என்ற உன்னத நோக்கில் தியானத்தைச் செய், உன் திருப்திக்காகவல்ல.
எந்தவொரு முனைப்பான செயலும் தெய்வச் சின்மயத்தில் (divine consciousness) பதிக்கப் பெறுகிறது. பக்தனான உன் கடமை அவர் எதை அனுப்புகிறாரோ அதையப்படியே ஏற்றுக் கொள்வது - அது மட்டும் அல்ல, அவர் எதை அனுப்பவில்லையோ அதையும் தான். எந்த உன் பழைய கர்மா அவரை நீ தற்சமயம் காணவிடாமல் தடுக்கிறது என்பதைக் கடவுள் ஒருவரே அறிவார். உனக்கு இடையறாத இன்பத்தை அருளுமுன்னர் உன் பழைய கர்மக்கடன்கள் எல்லாவற்றையும் நீ இந்த ஜென்மத்திலேயே தீர்த்துவிட வேண்டும் என்றுகூட அவர் கருதியிருக்கலாம். "
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment