Friday, September 14, 2012

235

ஓம் சத்குரவே சரணம்
  
ஒரு சீடர் அடிக்கடி மூட் (mood - மனமூட்டம்) வசப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் குருதேவரை நோக்கி, "நான் ஏன் மூட் வசப்படுகிறேன்?" என்று வினவினார்.

அதற்கு குருதேவர், "மிக அதிகமாக புலனின்பத்தில் உழல்வதின் காரணமாக மூட் தோன்றுகிறது. அளவுக்கு மீறி அனுபவித்து புலன்கள் திகட்டிப் புளித்துப் போவதின் விளைவாக அவை தோன்றுகின்றன. அவற்றின் வசப்படாதீர்கள்," என்று பதிலளித்தார்.

அவர் மக்களுக்கு பலமுறை இதைப் பற்றி கீழ்கண்டவாறு உபதேசம் செய்தார்:"நீங்கள் மூட் வசப்பட்டீர்கள் எனில், அது எதனால் வசப்பட்டோமோ அதற்கு எதிரிடையான புலனின்பங்களின் பழைய நினைவுகளைத் தூண்டி விடும். அதன் மூலம், அவை உங்களை மோகக்குழிக்குள் மேலும் ஆழ்த்தும்."

"மூட் ஏன் இப்படி பழைய ஆசைகளை, ஒருவனை அக்காலத்தில் துன்புறுத்தியிருந்த போதிலும், மீண்டும் தூண்டி விடுகின்றன?" என ஒருவர் கேட்கலாம்.

அதற்கு குருதேவர் தந்த பதில்,"வாழ்க்கை இருமைத் தத்துவத்தை இதன் மூலம் வெளிக்காட்டுகிறது. அது ஒரு ஊஞ்சல் போல எதிரெதிர் உணர்வு நிலைகளிடையே முன்னும் பின்னுமாக தொடர்ந்து ஆடிக் கொண்டேயிருக்கிறது. ஒரு திசையில் அது அதிகமாகச் மேலேறிச் சென்றால், மறுதிசையிலும் அதே போல அதிகமாக ஊசலாடும். மூட் வசம் உழல்வது ஒரு மனிதனை அவனுக்குத் தெரிந்தோ தெரியாமலோ (எதிரிடை புலனின்பங்களுக்கு) இட்டுச் செல்கிறது.
 இப்படி முடிவில்லாமல் சென்று வரும் இயக்கத்தை நிறுத்த, ஒரு குழந்தை எப்படி ஊஞ்சலிலிருந்து இறங்க வேகத்தைத் தளர்த்துகிறதோ அப்படி இங்கும் செயல்பட வேண்டும்.

மேலும் குருதேவர் கூறினார், "பற்றற்ற மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வதே இந்நோயைத் தீர்க்கும் உபாயம். ஒரு குழந்தை ஊஞ்சலிலிருந்து இறங்கும் போது, அவன் முன்னும் பின்னுமாக இரு திசையிலும் இயக்கத்தைத் தடை செய்கிறான். 

அதே போல வாழ்க்கை ஊஞ்சலை நிறுத்த உபாயம்: எந்த ஒரு சுகத்தை அனுபவிக்க நேர்ந்தாலும் அவற்றை உள்முகப்படுத்தி அடக்கிக் கொள். அதன் விளைவாக, ஒரு துக்கத்தை வாழ்க்கை உன்மேல் சுமத்தினால், அதையும் உள்ளடக்கிக் கொள். எல்லா நிகழ்வுகளிலும் சமபாவனையுடன் இருக்க முயற்சி செய், அதன் விளைவாக கேடும் பெருக்கமும் உன்னை ஆழமாகப் பாதிக்காது. 

இதனால் ஒரு உணர்ச்சியுமற்ற மரக்கட்டை போல் ஆகி விடுவோம் என்று அர்த்தமல்ல. அதற்கு மாறாக, என்னென்ன புலனின்பங்களை நீ அனுபவிக்கின்றாயோ அவை உன் உள்ளேயிருந்து தான் உண்மையில் தோன்றுகிறது, அவை வெளி விஷயங்களில் இல்லை என்ற ஞானத்தை அடைவாய். அதன் மூலம் நீ அனுபவிக்கும் இன்பம் பன்மடங்கு அதிகரிக்கும்."

‪#‎Conversations‬ with Yogananda 235 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)




ஓம் தத் ஸத்

 பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment