Wednesday, September 12, 2012

273

ஓம் சத்குரவே சரணம்
குருதேவர் சொன்னார், "காம இச்சைத் தூண்டுதல் நேரும் போது, 

'கடவுளே, உனது சக்தியே என்னுள்ளிருந்து வெளிப்படுகிறது. அதை என்னுள்ளேயே இன்னும் வலிமையாக மாற்றி, அதைப் பொருத்தமான வழிகளில் செலுத்தி ஆக்க வேலைக்குப் பயன்படுத்துவேன்' 

என்று உனக்குள்ளே சொல்லிக் கொண்டு மூச்சுப் பயிற்சி செய் (மூச்சை உள்ளிழுத்து சரீரத்தை இறுக்கி; பின் மூச்சை வெளியே விட்டு சரீரத்தைத் தளர்த்தி செய்யும் பயிற்சி). இப்படி பலமுறை மீண்டும் மீண்டும் செய்.

"கோழைத் தவளைகள் உன்னை உதைத்து அலைக்கழிக்குமாறு வைத்துக் கொள்ளாதே! என என் குருதேவர் (ஸ்ரீ சுவாமி யுக்தேஷ்வர் கிரி) கூறுவதுண்டு. 

எவ்வளவுக்கெவ்வளவு நீ காம இன்பத்தை அடக்கி ஆள்வாயோ அவ்வளவுக்கவ்வளவு நீ எல்லா விதத்திலும் வலிமையுடவனாக ஆவாய். 
அதற்கு மாறாக நீ 'நான் அதைச் சிந்தாமல் இருக்க முடியாது' என கோழைத்தனமாக முடிவெடுத்தால், நீ உன்னை (சிற்றின்ப உலக) வாழ்க்கைக்கு அடிமையாக்கிக் கொள்வாய். 

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நீ காம இன்பத்தின் வசப் படுகிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு நீ மோகத்தின் வலையிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ளும் சக்தியை குறைத்துக் கொள்வாய்."

‪#‎Conversations‬ with Yogananda 273 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)


ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment