ஓம் சத்குரவே சரணம்
டாக்டர் லூயிஸ் என்னிடம் பின்வருமாறு சொன்னார், "ஒரு முறை குருதேவரிடம்,
'ஐயா, ஒரு எண்ணம் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. நீண்ட முயற்சிக்குப் பின் ஒரு சமயம் நான் முக்தி அடைகிறேன் என்று வைத்துக் கொள்வோம். இந்த விடுதலை பிரம்மாவின் ஒரு நாள்* வரை தான் நீடிக்குமா? பிரம்மாவின் இரவிற்குப் பின்னர் தோன்றும் புதிய படைப்பில் நான் எல்லா ஜீவராசிகளுடன் திரும்ப இங்கு வந்து மறுபடியும் நீண்ட, துன்பகரமான போராட்டத்திற்கு உட்படுத்தப்படுவேனா? தற்சமயம் செய்யும் முயற்சிகள் எல்லாம் வீணாகி விடும் போல் இருக்கின்றதே!'
என்று கூறினேன். அதற்கு குருதேவர்,
'பயப்படாதே, ஒருமுறை ஜீவாத்மா விடுதலையெய்தி விட்டால் அது நிலைபெயராத சநாதன பதத்தை அடைந்து விடுகிறது. திரும்ப அது இங்கு வந்து நீண்ட, சிக்கலான பரிணாம வளர்ச்சிப் பாதையில் மாட்டிக் கொள்ளாது,'
என்று உறுதியுடன் நம்பிக்கைக் கொடுத்துப் பதில் கூறினார். "
"அந்த பதில் எனக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது!" என்று டாக்டர் மேலும் கூறினார்.
-----------
* - பிரபஞ்சத்தை ஒருமுறை தோற்றுவிக்க எடுத்துக் கொள்ளும் கோடிக் கணக்கான வருடங்கள் "பிரம்மாவின் ஒரு நாள் (பகல்)" என இந்து வேதாகமங்களில் விவரிக்கப் பட்டுள்ளது. மேலும், "பிரம்மாவின் பகலுக்குப்" பிறகு அதே அளவு காலவரையுள்ள "பிரம்மாவின் இரவில்" வெளித் தோற்றத்தில் இருக்கும் பிரபஞ்சம் உள்ளிழுக்கப் படும் என்றும், அச்சமயம் இன்னும் விடுதலையடையாத உயிர்கள் பிரம்மா சைதன்யத்தினுள் "பீஜ ரூபமாக" படைப்பின் அடுத்தமுறைத் தோற்றத்திற்கு ஆயுத்தமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் என்றும், திரும்ப "பிரம்மாவின் பகலில்" அவ்வுயிர்கள் எந்த நிலையில் விடுபட்டதோ அதே நிலையிலிருந்து மேற்கொண்டு வாழ்க்கையைத் தொடர்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
#Conversations with Yogananda 91 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment