ஓம் சத்குரவே சரணம்
குருதேவர் எங்களிடம் கீழ்வருமாறு கூறினார், "நான் என் குருதேவர் (ஸ்ரீ சுவாமி யுக்தேஷ்வர் கிரி) ஆசிரமத்தில் வசிக்கும் போது ஒரு முறை நான் இன்னொரு ஆன்மீக ஸ்தாபனத்துடன் எங்களுடைய ஸ்தாபனத்தை ஒப்பீடு செய்யத் தொடங்கினேன்.
"அதற்கு என் குருதேவர், 'ஏன் நீ இப்படி ஒப்பீடு செய்கிறாய்? கடவுள் நம் அமைப்பிலே என் வழியாகவும், உன் வழியாகவும் செயல்பட விரும்புகிறார். கடவுள் எந்தப் பாதையில் நம்மை ஈர்த்துக் கொண்டாரோ அந்தப் பாதையிலேயே நாம் விசுவாசத்துடன் உறுதியாக வழி நடப்போமாக,' என்று பகர்ந்தார்.
"கடவுள் என்மூலம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படுகிறார் என்பதை நினைக்கும் போது என் மெய்யெல்லாம் சிலிர்க்கின்றது."
#Conversations with Yogananda 461 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
#Conversations with Yogananda 461 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:
Post a Comment