ஓம் சத்குரவே சரணம்
துறவறம் பற்றிப் பேசுகையில், குருதேவர்,
"நீ கடவுளுக்காக உண்மையில் இந்த உலக இன்பங்களைத் துறந்தாய் என்றால், ஏசு கிறிஸ்து சொன்னது போல, நீ நூறு மடங்காக உண்மையான இன்பத்தைப் பெறுவாய்.
அதே போல, அவர் கூறிய படி மற்றவர்களால் நீ துன்புறுத்தப் படுவதும் உறுதி. யாருக்கும் இதிலிருந்து விதிவிலக்கு கிடையாது. கடவுள் தன் பக்தன் தன்மேல் உள்ள பக்தியில் ஸ்திரமாக உள்ளானா என்பதை உறுதி செய்து கொள்ள, இது ஒன்றுதான் வழி.
ஒருவன் உலக வழிகளை ஒதுக்கிவிட்டு, ஆன்மீக பாதையை மேற்கொள்ளும் போது, அவன் உலகத்தின் வெறுப்பைச் சந்திக்கத் தயங்கக் கூடாது."
என்று கூறினார்.
#Conversations with Yogananda 085 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment