ஓம் சத்குரவே சரணம்
குருதேவர் ஒரு சீடரை நல்வழிப்படுத்தச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அது சம்பந்தமாக அவர் ஒருமுறை ஆச்சரியத்துடன் கூறினார்,
"மக்கள் தங்கள் அறியாமைத் 'திறமை' யில் மிகுந்த சாமர்த்தியர்களாக இருக்கிறார்கள்!" :-)
கொஞ்சம் பொறுத்துச் சொன்னார்,
"மக்களுக்கு ஒருவர் ஆன்மீக உதவி செய்ய முனையும்போது, அவர் எப்பேர்ப்பட்ட ஒரு வேலையை மேற்கொள்கிறார்: அவர்கள் மனதிற்குள்ளே நுழைந்து சென்று என்ன என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு, நாம் ஒரு ஜாடியில் (vase) பொருந்திய வண்ணம் ஒரு ரோஜா மலரை காணும்போது பார்க்க எப்படி அழகாக இருக்கிறது.
இப்படி ஒரு ரோஜா மலரைப் பறித்து, நேர்த்தியாக்கி, சீக்கிரம் வாடாவண்ணம் ஜாடியில் பொருத்தவே இவ்வளவு காரியம் தேவைப்படும் போது, யோசித்துப் பாருங்கள்! ஒரு பண்பட்ட அழகிய மனிதனை உருவாக்குவது எவ்வளவு அரிய, கடினமான செயல் என்று!"
#Conversations with Yogananda 261 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment