ஓம் சத்குரவே சரணம்
முன்நடந்த ஒரு சம்பவத்தை குருதேவர் சொன்னார்:
"ஒரு பெண்மணியிடம் அவருடைய ஒரு கிட்னியை (kidney) நீக்கியாக வேண்டும் என்று அவருடைய டாக்டர் கூறியிருந்தார். என்னிடம் அந்தப் பெண்மணி ஆலோசனைக்கு வந்தார். கடவுளிடம் கேட்டுக் கொண்டபின், நான் அவரிடம் 'இன்னும் சில டாக்டர்களிடம் கூட ஆலோசனை கேட்கலாமே? இந்த முக்கியமான முடிவை ஒரு நபருடைய கருத்தை மட்டும் வைத்து எடுக்க வேண்டாம்' என்று கூறினேன். அவர் இரண்டு, மூன்று டாக்டர்களிடம் சென்றார். அவர்கள் எல்லாரும் 'கிட்னியை நீக்க அவசியமில்லை' என்று கருத்து கூறினார்கள்.
"பிறகு நான் அவரிடம், எந்தவித இறைச்சி மற்றும் முட்டைப் பண்டங்களையும் சாப்பிட வேண்டாம் என்றும், கனிந்த நார்த்தங்காய் (grapefruit) பழச்சாற்றை நிறைய குடிக்க வேண்டும் என்றும் உணவுமுறையில் மாற்றங்களைக் கூறினேன். ஒரு மாதத்திற்குள் அவர் நல்ல ஆரோக்கியம் வரப் பெற்றார். பிறகு, அவருடைய டாக்டரிடம் சென்று காண்பித்தார். அந்த கிட்னி கோளாறு சுவடின்றி முற்றிலும் மறைந்துவிட்டதாக டாக்டர் கண்டு சொன்னார்."
குருதேவரின் சுகப்படுத்தும் முறை எளிய பொதுஅறிவின் (common sense) அடிப்படையில் அமைந்திருக்கும். ஆனால், அவர் "பொதுஅறிவு" ஆழ்ந்த உண்மைஅறிவையும் (intuitive insight) கொண்டதாக இருக்கும். சூழ்நிலைக்கேற்ப அவர் சிறந்த ஆரோக்கியத்திற்கான பல வழிமுறைகளைக் கூறுவார். அவர் "God helps those who help themselves" (" தன்துன்பம் களைய தன்னால் ஆன முயற்சி செய்பவர்க்கு, கடவுள் உறுதுணையாகக் ஊக்கமளிப்பார்") என்ற பழமொழிக்கேற்ப நடைமுறையில் செயல்பட்டார்.
#Conversations with Yogananda 138 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment