Saturday, July 25, 2009

291

ஓம் சத்குரவே சரணம்

குருதேவர் எங்களிடம் வலியுறுத்திச் சொன்னார்,

"நீங்கள் ஒவ்வொருவரும் சுயமாகக் கடவுளிடம் பக்தி செலுத்தவேண்டும். மனத்தை எப்பொழுதும் நெற்றியிலுள்ள ஆத்மக் கண்ணிலேயே (spiritual eye) நிலைக்கச் செய்திருங்கள். 

வேலைசெய்யும் போது, நீங்கள் கடவுளுக்காகவும், குருவிற்காகவும் வேலைசெய்வதாக எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். 'கடவுள், குரு' என்றும், 'கடவுள், கிறிஸ்து, குரு' என்றும் மனத்தில் எப்பொழுதும் ஜபம் செய்துகொண்டே இருங்கள்.

நிறைய பேர் இங்கு வருகிறார்கள், வந்து பயனற்ற பேச்சுக்களிலும், தமாஷாக்களிலும் அவர்கள் பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்கள் கடவுளை அடையப் போவதில்லை! 


இங்குள்ள பள்ளத்தாக்கில் (canyon) நிறைய பெருச்சாளிகள், எலிகள் கூட வாழ்கின்றன; ஆனால், அவை ஆன்ம வளர்ச்சி அடைவதில்லை; அவை கடவுளைக் காணுவதும் இல்லை. இங்கு வெறுமனே இருப்பதால் மட்டுமே அவரை அடைந்துவிட முடியாது. 

நீங்கள் ஒவ்வொருவரும் சொந்தமாக விடாமல் முயற்சி செய்யவேண்டும். முடிவாகப் பார்த்தால், ஒவ்வொருவரும் தன் வளர்ச்சிக்குத் அவரவர்    தனியொருவனாகவே தான் பொறுப்பு ஏற்றாக வேண்டும்."

‪#‎Conversations‬ with Yogananda 291 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment