ஓம் சத்குரவே சரணம்
"ஐயா, எப்படி ஒருவன் பணிவை நன்கு அடையப் பெறுகிறான்?" என்று க்ளிஃபோர்ட் என்பவர் குருதேவரிடம் கேட்டார்.
குருதேவர் பதில் சொன்னார்,
"பணிவு என்பது, நீ உன்னைச் செயல்புரிபவனாகக் காணாமல் கடவுள் உன் வழியாகச் செயல்புரிபவராகக் காண்பது. அவர் உன் மூலம் செயல்படுவதாகக் காணும்போது, எந்த செயலைக் குறித்தாவது எப்படி நீ கர்வம் கொள்ள முடியும்?
"நான் இங்கே உட்கார்ந்து அனுதினமும் என் புகழைப் பாடிக்கொண்டு இருக்கலாம்: அதனால் எனக்கு அணுவளவும் பயனில்லை. பணிவு நெஞ்சத்தின் குணம்; வெளிவேஷம் அன்று. நீ செய்யும் எல்லா செயல்களையும் அவர் ஒருவரே உன் மூலமாகச் செய்து முடிக்கிறார் என்பதை உணர வேண்டும்."
நான் அறிந்த வரை, குருதேவருடன் கூட இருந்த என் அனுபவத்தில், ஒருபொழுதும் அவர் கண்களில் நான் அகங்காரச் சாயலைக் கடுகளவும் கண்டதில்லை. தன்னுள்ளே எல்லையற்று விரிந்திருக்கும் தெய்வ சன்னிதானமான ஆத்மாவை அவர் இடையறாமல் உணர்ந்திருந்தார்.
அவர் அடிக்கடி கூறக் கேட்ட ஒரு வாக்கியம்:
"நான் வெகு காலத்திற்கு முன்னரே யோகானந்தாவைக் [அஹங்காரத்தைக் குறிப்பிட்டு] கொன்றுவிட்டேன். [தன்னைச் சுட்டிக் காட்டி] இப்பொழுது இந்த உடற் கோயிலில் கடவுளைத் தவிர வேறு யாரும் இல்லை." மேற்கண்ட உரையாடலிலிருந்து ஒரு புது அர்த்தம் பெறுகிறது
#Conversations with Yogananda 329 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment