Saturday, July 25, 2009

347

ஓம் சத்குரவே சரணம்

1949ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தியானத்தின்போது குருதேவர், "Do not dry the ocean of my love with the fires of my desires (என் அன்புக்கடலை வற்றச் செய்யாதே என் பேராசைத் தீயால் எரித்து*)" என்ற சங்கீர்த்தனத்தை கோஷ்டியுடன் பஜனை செய்தார். நாங்கள் பலமுறை இதைப் பாடினோம்.

அவர் சொன்னார்,

"கிறிஸ்து இன்று இங்கே நிரம்பியுள்ளார் , அவரை நோக்கிப் பாடுங்கள்" என்று.

சற்று நேரம் பொறுத்துக் கூறினார்,

"எப்பொழுதாவது நீங்கள் உங்களை மோக இருள் சூழ்வதாக உணர்ந்தால், இந்த சங்கீர்த்தனத்தைப் பாடுங்கள், இச்சம்பவத்தை நினைவுகூறுங்கள். கிறிஸ்து, குரு தாங்களாக வந்து உங்களைக் கஷ்டத்திலிருந்து காப்பார்கள். இது சத்தியம்."

----
* - முழுப் பாடல் - ஆங்கிலத்தில் இயற்றிவர்: ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

என் பேராசைத் தீயால் எரித்து,
என் ஆரவாரத் தீயால் எரித்து,
என் அன்புக்கடலை வற்றச் செய்யாதே!

கதறிக் கதறி அழுவேன் நான் உனக்காக,
கண்ணீர் மல்கி அழுவேன் நான் உனக்காக.
இனி இல்லை எனக்கழுகை, இனி என்னுடயவன் நீ!

உனைத் தேடுகிறேன் என் மனத்தின் எல்லைக்கப்பால்,
உனைத் நாடுகிறேன் என் நெஞ்சின் எல்லைக்கப்பால்.

மறையாதே இனி! நாதா, ஒருபொழுதும் மறையாதே!
விட்டுவிடாதே எனை! மாதா, ஒருபொழுதும் விட்டுவிடாதே!

‪#‎Conversations‬ with Yogananda 347 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)



ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment