Sunday, September 13, 2009

008

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

"நீங்கள் ஒரு டாக்டரிடம் சென்று நோய் தீர்ப்பதற்கான  மருந்துச் சீட்டைப் பெற்று, ஆனால் மருந்து வாங்காமல், வீடு திரும்பிய பின் அதை கிழித்து எறிந்துவிட்டீர்கள்  என்றால், எப்படி நீங்கள் குணம் பெற முடியும்?

குரு என்பவர் ஆன்மீக 'மருத்துவர்'. குரு என்று ஒருவரை வைத்திருந்தால் மட்டும் போதாது; அவர் சொல்வதைத் தவறாமல் செய்ய வேண்டும். அவருடைய  ஆலோசனைகளில் கொஞ்சம் செயல்படுத்தினாலே உங்கள் வாழ்க்கை நல்ல மாற்றம் பெறும். 

யார் யார் இங்கு கற்பதை நடைமுறையில் அனுபவத்தில் கொணர்கிறார்களோ, அவர்கள் மரண வாயிலைக் கடந்து ஜோதிர்மயமான ஒளி ராஜ்ஜியத்தை அடைவார்கள்.

ஆனால் வெறுமனே குருவிடம் ஒட்டிக் கொண்டிருப்பதால் மட்டும் அங்கு சென்று விட முடியாது. அப்படி செய்வது, ஒரு மூட நம்பிக்கை உடைய நோயாளி தான் வாங்கி வந்த மருந்துச் சீட்டைச்  சட்டம் அடித்து சுவரில் அழகாக மாட்டி விட்டு, அந்த எழுத்துக்களே தம்மைக் குணப்படுத்திவிடும் என்று எண்ணுவதைப் போலே! :-) 

மேலும் கடைசி வரை  வெறுமனே பல்லைக் கடித்துக் கொண்டு அவரோடு 'தொங்கிக் கொண்டிருப்பதால்' மட்டும் இலக்கை அடைந்து விடலாம் என்றும் எண்ண வேண்டாம்!  

உறுதியான நம்பிக்கையுடன், பக்தி மற்றும் உவகையுடன் உன் வாழ்வை நடத்திச் செல். சரியான முறையில் வாழ்ந்தால், நீ உன் தெய்வீக இலக்கை அடைவதற்கு வெகு நாள் முன்னரே, வாழ்க்கை எவ்வளவு  இனிமையாக இருக்கும் என்பதை உணர்ந்து விடுவாய். 

நீ தேஜஸுடன் புஷ்டியாக, இன்பமயமாக ஒளி வீசிக் கொண்டிருப்பாய்!"

‪#‎Conversations‬ with Yogananda 008 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment