Tuesday, September 15, 2009

148

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

குருதேவரின் சிஷ்யர் ஹென்றி ஷாபில்பெர்கேர் (Brother Anandamoy) என்பவர் ஒரு முறை தொடர்ந்து பல்வேறு உடல்நல உபாதைகளைத் தாங்க வேண்டி இருந்தது. முதலில், ஒரு விலா எலும்பு முறிந்தது. பின்னர் உடலரிப்பினால் அவதிப் பட்டார். பின் இன்னொரு விலா எலும்பும் முறிந்தது. அவர் இப்படி வரிசையாக மேன்மேலும் தொல்லைகளை சந்திக்க நேர்ந்தது.

குருதேவர் அவரிடம் ஒரு நாள் சொன்னார், 

"எப்போதும் ஒரே துன்பமயமாக இருக்கிறதல்லவா? அது ஒருவிதத்தில் நல்லதுக்குத் தான். நீ இன்னும் பல அரிய செயல்களை செய்ய வேண்டியுள்ளது, அதனால் தான் இப்படி. கடவுள் உன்னை மேலும் பலவானாக ஆக்க விரும்புகிறார். 

"இங்கு நாம் விஞ்ஞானிகளை (D.D. - Doctor of Divinity) உருவாக்குவதில்லை. இங்கு நம் கோயில்களில் பணி செய்யும் மினிஸ்டர்கள், பிறருக்கு கற்றுத்தரும் உரிமையை, புத்திபூர்வமான பாடத்திட்டத்தினால் பெறுவதில்லை. அவர்கள் தெய்வச் சோதனைகளை எதிர்கொண்டு அவைகளை வெல்வதிலிருந்து பெறுகிறார்கள். "

‪#‎Conversations‬ with Yogananda 148 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment