Thursday, September 24, 2009

309

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

குருதேவர் நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளை வரவேற்றார். ஆனால், அதே சமயத்தில், விஞ்ஞானம் எந்தவொன்றையும் புதிதாக இல்லாத ஒன்றிலிருந்து கண்டு பிடிக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டினார். அதே போல, கலைஞர்களும் புதிதாக ஒன்றையும் உற்பத்தி செய்ய இயலாது என்றும் கூறினார்.

"அதிக பட்சம் மனிதனால் செய்ய முடிவது ஏற்கனவே மறைந்தோ, வெளிப்படையாகவோ உள்ளதை மாற்றி அமைப்பது தான். 

மனிதனைப் போல, கலை, விஞ்ஞானம் போன்றவை கடவுளின் பிரபஞ்ச லீலைக்கு அனுசரணையாகத் துணைபுரிய உருவாக்கப்பட்டவை. இதைத் தவிர, இந்த பெருஞ்சீர் உலகத்தில் அவை அவ்வளவு முக்கியமானவையல்ல. 

கடவுளின் முன் பணிதலே உண்மையான அறிவின் தொடக்கம். அஹங்கார கர்வம் ஒருவனின் அறிவிற்கு சாவுமணி." என்று கூறினார்.


‪#‎Conversations‬ with Yogananda 309 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment