Friday, November 5, 2010

356

ஓம் சத்குரவே சரணம்

"நீ செய்யும் நல்வினை, தீவினை இரண்டையும் கடவுளிடம் சமர்ப்பித்து விடு. அதற்காக வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்தாலும் தவறில்லை என அர்த்தம் செய்து கொள்ளாதே. 

ஒரு பழக்கம் வலுவானதாயிருந்து உன் சக்தியையும் மீறிச் செயல்படும் போது, 'கடவுள் என் மூலம் செயல்புரிகிறார்' என்று உறுதியாக கூறிக் கொள்ள வேண்டும். நீ செய்யும் தவறுகளுக்கும் கடவுளைப் பொறுப்பாக்குவதனால், உன் உள்ளத்தைச் சுருங்க வைக்கும் அகங்கார ஜீவபோதத்தை (ego self-identity) நீ தகர்க்க முடியும். 

கடவுள் உன்னைப்  தனியாகப் பிரிந்து தோன்றும் அகங்காரத்துடன் மனிதனாக படைத்திருந்த போதிலும், அவர் தான் உன்னைத் தன் கனவு சிருஷ்டியில் ஒரு அங்கமாகத் தோற்றுவித்ததற்க்குக் காரணம். 

நாம் கடவுளின் துணையின்றிச் செயல்பட முடியும் என்ற எண்ணமே ஒரு பெரும் மோகம்."

மேற்கொண்டு இக்கருத்தை நான் (வால்டர்) உள்ளும் போது, பெரும் யோகிகள் இப்படித்தான் தங்கள் சஞ்சித கர்மாக்களை ஞான திருஷ்டியின் மூலம் விடுவித்துக் கொள்கிறார்கள் என்று உணர்கிறேன். அவர்கள் தங்கள் அதீத உணர்வு (super consious) நிலையில், கடவுள் ஒருவரே எல்லா செயல்களையும் அவர்கள் வழியாக செய்வதாக பார்க்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் அச்செயல்கள் தங்களின் தனிப்பட்ட பொறுப்பு (personal responsibility) அல்ல என்று உணர்கிறார்கள்.

‪#‎Conversations‬ with Yogananda 356 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment