Sunday, September 30, 2012

265

ஓம் சத்குரவே சரணம்
இருள் சூழ்ந்த தமோ குண லோகங்களிலிருந்து நோய் செய்யும் கிருமிகள் இந்த உலகத்திற்கு மேகங்கள் போல் வருகின்றன என்று குருதேவர் ஒருமுறை கூறினார். அவற்றின் ஒரே குறிக்கோள் இங்கு நாசத்தை விளைவிப்பதே! மனிதன் மருத்துவத் துறையில் நோயை ஒழிக்க அடையும் முன்னேற்றம் இந்நோய்க் கிருமிகளுக்குத் தண்டனையாக அமைகிறது.

 அப்புறம் குருதேவர் அதுபற்றி ஒரு விசித்திரமான விஷயத்தைக் கூறினார்,
"அந்த (தமோ குண லோகக்) கிருமிக் கூட்டங்கள் ஒரு காலத்தில் தவறி விழுந்த ஜீவாத்மாக்கள் (பதிதாத்மா - fallen soul). ஒரு ஜீவாத்மா தீயவற்றிலேயே அமிழ்ந்து உழன்றால் இவ்வளவு அடிமட்டத்திற்கு செல்வதற்கும் சாத்தியமாகிறது. பொதுவாக, ஒரு ஆன்மா மனிதப் பிறவிக்குப் பரிணாம வளர்ச்சியடைந்து விட்டால், அது கீழ்நிலைப் பிறவியெடுக்காது. ஒருக்கால், அப்படி ஆக நேர்ந்தால், அது ஒரு பிறவிக்கு ஏதோவொரு உயர்வகை மிருகமாகப் பிறப்பெடுத்து அடுத்த பிறவியில் மீண்டும் மனிதப் பிறவியடையும். இவ்விதமாக ஒருவன் பல தடவை ஒரு பிறவிக்கு மட்டும் கீழ்வகைப் பிறப்பெடுக்குமாறு நேரலாம். ஆனால், ஒருவன் வெகு காலமாகத் தவறிலேயே அமிழ்ந்து இருந்தானென்றால், அவன் பரிணாம வளர்ச்சி என்னும் ஏணியில் வெகு கீழே தள்ளப்படுகிறான். அப்படித் தள்ளப் பட்டவனுக்கு தனக்கு எதோ ஒரு பெருந் தீங்கு விளைந்துள்ளது என்ற உணர்வு தொடர்ந்து கொண்டேயிருக்கும். அந்த உணர்வு அவனுக்கு ஒரு பெரும் தண்டனை! நான் முன்னே சில சமயங்களில் கூறியபடி, தீயவையே முற்றிலுமாக நிரம்பியிருக்கும் சில நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. அப்படிப்பட்ட மண்டலங்களிலிருந்து வந்து, இக்கிருமிகள் இங்கு பலதேசங்களில் பரந்து விரிந்து நோயால் (epidemic) தாக்கத்தை உண்டு செய்கின்றன."

#‎Conversations‬ with Yogananda 265 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment