Saturday, September 29, 2012

383

ஓம் சத்குரவே சரணம்
"கடவுள் மக்களின் எல்லா வேண்டுதல்களுக்கும் அருள்புரிகிறார். ஆனால், சஞ்சல மனத்துடன் வேண்டும் போது அவர் அருள் ஒரு சிறிதளவே கிட்டுகிறது. 

உனக்கு உரிமையில்லாத ஒன்றை நீ மற்றவர்களுக்குக் கொடுத்தாயானால், அது வெறுமனே வெளிவேஷம் போல் ஆகும் அல்லவா? அது போல, நீ கடவுளிடம் வேண்டும் போது, உனது சொந்த எண்ணங்களின் மேலேயே உனக்கு ஆளுமை இல்லையெனில், அந்த வேண்டுதல் தன் சக்தியை இழந்து விடும். 

உன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இவ்விரண்டும் நீ வழிபடும் போது ஒருமுகப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், கடவுள் உன் சிறிய, சோர்வடைந்த வேண்டுதலுக்கு, அதற்கு ஏற்ப சிறுவிதமாகப் பதிலளிப்பார்! 

பொதுவாக, மக்கள் செய்யும் வேண்டுதல்கள் தாம் ஒரு நண்பனிடம் நம்பிக்கையுடன் அன்பாகக் கேட்பது போலல்லாது, ஒரு பிச்சைக்காரன் அரைமனதுடன் முணுமுணுப்பது போல் இருக்கின்றன."

‪#‎Conversations‬ with Yogananda 383 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment