Tuesday, October 9, 2012

168

ஓம் சத்குரவே சரணம்
 
குருதேவரது ஆச்ரமத்தில் புதிதாகச் சேரும் துறவிகளுக்காக நடத்தும் வகுப்பில் பகவான் கிருஷ்ணரின் கதைகள் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நான் ஒருமுறை குருதேவரிடம் வினவினேன். அதற்கு அவர் தந்த பதில் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
 
"ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளைச் சொல்வதெல்லாம் சரி தான், ஆனால், தெளிவான கருத்துக்களை உடைய கதைகளை மட்டும் கவனத்துடன் தேர்ந்தெடு. ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - குறிப்பாக, அவரின் பால்ய பருவ பிருந்தாவனக் கதைகள் - ரகசியார்த்தம் (allegorical) பொருந்தியவை. மேற்கத்தியர்கள், மற்றும் பல இந்தியர்கள் உட்பட, அவற்றை மிகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, மேற்கத்தியர்கள் இக்கதைகளைப் படிக்கும் போது, கோபியர்களை சாதாரண இளம் பெண்கள் எனவும், அவர்கள் மனிதக் காதல் உணர்ச்சியில் ஆனந்திக்கிறார்கள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், கோபியர்கள் முன்பிறவியில் வாழ்ந்த ரிஷிமார்கள். அவர்கள் இப்படிப் பிறவியெடுத்ததன் உட்கருத்து, ஆத்ம-பரமாத்ம உறவைக் காட்டுவதற்காகவே. இவ்வுறவில் புலனின்ப சிற்றுணர்வோ அல்லது களங்கமோ சிறிதுமில்லை. உலக போகத்தில் திளைப்பவர்கள், இக்கதைகளைக் கேட்கும் போது, அவர்களுடைய சிற்றின்ப, சுயநல வேட்கைகளை இவ்வுறவுகளின் மேல் ஏற்றுவித்து அனர்த்தம் செய்து கொள்கிறார்கள். உண்மையோ இப்போக்கிற்கு முற்றிலும் புறம்பானது.

"இக்கதைகளின் நோக்கம் மக்களை காமக் கவர்ச்சியின் பிடியிலிருந்து மீட்பதே அல்லாமல் வேறல்ல. அதனால் தான், நான் உன்னிடம் இக்கதைகளைக் கவனத்துடன் கையாள வேண்டும் என எச்சரிக்கின்றேன்." என்று முடித்தார்.


ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.
 

No comments:

Post a Comment