Sunday, October 7, 2012

196

ஓம் சத்குரவே சரணம்
 
நான் ஒருமுறை குருதேவரிடம் அவருடைய யோகியின் சுயசரிதத்தில் (Autobiography of a Yogi) ஏன் ரமண மகரிஷியைப் பற்றி எழுதவில்லை என வினவினேன். அதற்கு அவர், "பால் பிரண்டன் (Paul Brunton) என்பவர் அவருடைய ரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A Search in Secret India) என்னும் நூலில் அவரைப் (ரமண மகரிஷியைப்) பற்றி ஏற்கனவே எழுதியிருப்பதால்," எனப் பதிலளித்தார்.
 
அச்சமயம் நான் வெளியே சொல்லவில்லையெனினும், வேறு ஒரு காரணமும் இருக்கலாமோ என்று மனதுக்குள் தோன்றிற்று. ஏனென்றால், இவ்விரு மகான்களுக்கும் (பரமஹம்ச யோகானந்தர், ரமண மகரிஷி) உலகத்தில் மிக வேறுபட்ட இரு விதமான பாத்திரங்கள் (roles) அமைந்திருந்தன. யோகானந்தர் ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு விஜயம் செய்ததைப் பற்றி மகரிஷியின் ஒரு புத்தகத்தில் குறிக்கப் பட்டுள்ளது. மகான்களைப் பற்றிய நூல்களில் சில நூல்கள் மட்டுமே அவர்களின் உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும். அந்த புத்தகம் கூட இவ்விரு மகான்களின் சந்திப்பின் உட்கருத்தைப் பற்றிக் குறிக்கவில்லை. யோகானந்தர் என் சஹசீடர், தேவி முகர்ஜீ, என்பவரிடம் பின்வருமாறு கூறினார், "ரமண மகரிஷியின் சகோதரர் [ஆசிரமத்தில் அவர் கண்டிப்பிற்குப் பேர் பெற்றவர்] என்னை ஒரு வாக்கு வாதத்திற்கு இழுக்க முயற்சித்தார். ரமண மகரிஷி அவரைக் கடுமையாகப் பார்த்து, தலையசைத்து, 'அங்கிருந்து விலகி வா,' எனச் சைகை செய்தார்."

1936ஆம் வருடம் அலகாபாத்தில் குருதேவர் கலந்து கொண்ட கும்ப மேளாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி அவர் சொன்னது என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் பிரபலம் பெற்ற காரா பத்திரி என்பவரைச் சந்திக்கும் போது, தன் ஆற்றலை காரா பத்திரி அறியா வண்ணம் நடந்து கொண்டாராம். இப்படி நடந்து கொள்வதன் நோக்கம் யாதெனில், காரா பத்திரி தான் சொல்ல வந்ததைத் தங்கு தடையின்றுச் சொல்வதற்கு ஏதுவாக இருக்கும், என்பதற்குத் தான். அதே போல, குருதேவர் ரமண மகரிஷியின் ஆச்ரமத்தில் கூட அப்படி நடந்து கொண்டாரோ என ஊகிக்கத் தூண்டுகிறது. ஒரு புகழ் பெற்ற மகானின்முன், அவருடைய ஆச்ரமத்தில், குருதேவர் தான் ஒரு ஆசிரியர் என்பதை இங்கிதம் கருதி வெளிக் கொணராமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment